Thursday, 29 March 2018

வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் பெருக


* ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான்.
* வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும்.*
* தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.
* சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.
* தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.

தம்பதியர் ஒற்றுமைக்கு ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்


குடும்பத்தில் கணவன் – மனைவிக்கு இடையே உள்ள பிரச்சனைக்கு ஆதிலட்சுமி ஸ்தோத்திரத்தை தினசரி பாராயணம் செய்துவர தம்பதிகளுக்குள் ஒற்றுமை பலப்படும்.
த்வி புஜாஞ்ச த்விநேத்ராஞ்ச சாபயாம்
வரதாந்விதாம்
புஷ்யமாலாதராம் தேவீம் அம்புஜாசன
சம்ஸ்த்திதாம்
புஷ்ப தோரண சம்யுக்தாம் ப்ரபா மண்டல
மண்டிதாம்
சர்வ லக்ஷண சம்யுக்தாம் சர்வாபரண பூஷிதாம்
பீதாம்பரதராம் தேவீம் மகுடே சாரு பந்தநாம்
ஸ்தநோந்நதி சமாயுக்தாம் பார்ச்மயோர்
தீபசக்திகாம்
செளந்தர்ய நிலையாம் சக்திம் ஆதிலட்சுமி மஹம் பஜே.

Tuesday, 27 March 2018

அனுமனுக்கு உகந்த வெற்றிலை மாலை வழிபாடு


இலங்கையில் ராமனுக்கும், ராவணனுக்கும் யுத்தம் நடைப்பெற்ற போது அரக்கர்களை பந்தாடி போர்களத்தில் வெற்றிக்கொடி நாட்டியவர் அனுமான்.அதனால் தான் அவருக்கு கொடியிலேயே வளரும் வெற்றிலையை மாலையாக போடுகிறார்கள்.
அசோகவனத்தில் சீதா பிராட்டியார் சிறைப்பட்டு இருந்த போது ராமதூதனாக சென்ற அனுமன் சீதையை சந்தித்து, ராமர் விரைவில் இலங்கை வந்து உங்களை சிறைமீட்டுச் செல்வார் என்று கூறினார்.இதைக் கேட்டு மகிழ்ந்து போன சீதை அருகில் இருந்த வெற்றிலை கொடியில் இருந்து வெற்றிலையை பறித்து அனுமானின் சிரசில் போட்டு சிரஞ்சீவியாக இருப்பாயாக என்று கூறி ஆசி வழங்கினார்.
இதை நினைவுகூரும் விதத்தில் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டி அனுமானுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கின்றனர்

மாத சிவராத்திரியன்று சிவ வழிபாடு


சிவபெருமானை மணம் கமழும் மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். அவரை நல்ல மணம் வாய்ந்த நீரால் அபிஷேகித்து, பூக்களால் அலங்கரித்து வலம் வந்து வணங்க வேண்டும். சிவாலயங்களை சாணமிட்டு மெழுகி, நீர்த்தெளித்து பெருக்கி சிவனை வாழ்த்தி வணங்க வேண்டும்.தேவையற்ற வார்த்தைகளை பேசுவதை தவிர்க்க வேண்டும். நெய்யும் பாலும் கொண்டு சிவனை அபிஷேகிக்க வேண்டும்.சிவலிங்கத்துக்கு நல்ல ஆடைகளை அணிவிக்க வேண்டும். எருக்கு மலர்களை இரட்டை மாலைகளாகக் கட்டி, லிங்கத்தின் தலையில் சாத்த வேண்டும்.